PeKa B40 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பொதுவான தகவல்கள்

 1. PeKa B40 என்றால் என்ன?
  • B40 குழுவிற்கானஉடல்நலத்திட்டம் (PeKa B40) குறைந்தவருமானம்கொண்டகுழுவினரின்சுகாதாரதேவைகளைநிறைவேற்றும்நோக்கில்சுகாதாரஅமைச்சின் மூலம்அரசாங்கம் அறிமுகப்படுத்திய சிறந்த திட்டமாகும். தொற்றுநோயற்றநோய்களுக்கே (NCDs) இத்திட்டம் அதிக கவனம்செலுத்துகிறது.
  • PeKa B40 எனும் இத்திட்டம் B40 எனப்படும் குறைந்தவருமானம் பெறும், அதாவது குடும்பவருமானம் 40% கொண்ட மலேசியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
  • அரசாங்க வாழ்வாதார உதவி பெறுநர்கள் (BSH) மற்றும்அவர்களதுவாழ்க்கைத்துணை 40 வயதிற்குமேற்பட்டவர்களாக இருப்பவர்களுக்கும், இயல்பாகவே PeKa B40 உடல்நலத் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர். மேலும், PeKa B40 –இல் இணைவதற்கு சிறப்புபதிவுகள் ஏதும்தேவையில்லை.
 2. PeKa B40 ஏன் நிறுவப்பட்டது?
 3. PeKa B40 -இன் நோக்கம் என்ன?
  • சுகாதார சேவைகளின் அணுக்கத்தை மேம்படுத்துதல், வாழ்க்கை செலவினத்தைத் தணித்தல் மற்றும் மக்களின் நல்வாழ்வை செழுமைப்படுத்துதல் ஆகியவற்றை PeKa B40 இலக்காகக் கொண்டுள்ளது. இந்த அமைப்புநோய்கள் மற்றும் குறிப்பாக அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு அளவில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது ஆகியனவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
 4. PeKa B40 -இன் பலன்கள் என்ன?
  • சுகாதாரப்பரிசோதனை
  • மருத்துவ சாதன உதவிகள்
  • புற்றுநோய் சிகிச்சை முழுமையடைவதற்கானஊக்கத்தொகை
  • போக்குவரத்து ஊக்கத்தொகை
 5. PeKa B40 -இல் யார் சேர முடியும்?
  • B40 பிரிவினர் என்று அழைக்கப்படும் குடும்ப வருமான வரம்பில் அடிமட்டத்தில் உள்ள 40% மலேசிய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. தகுதிக்கான வரையறை பின்வருமாறு:
   • அரசாங்க வாழ்வாதார உதவி பெறுநர்கள் (BSH) மற்றும்அவர்களதுவாழ்க்கைத்துணைவர்கள்
   • 40 வயது மற்றும் அதற்கும்மேற்பட்டவர்கள்
 6. பெறுநர்கள் எவ்வாறு PeKa B40-க்கான தங்கள் தகுதி நிலையைச் சரி பார்க்கலாம்?
  • அரசாங்கவாழ்வாதாரஉதவிபெறுநர்கள் (BSH) மற்றும்அவர்களதுவாழ்க்கைத்துணைவர்கள்தங்களின் மைகாட் எண் (MyKad IC Number)மற்றும் மற்ற தகவலின் சேர்மானத்தை இங்கேடைப்செய்வதின் மூலம் தகுதி நிலையைச் சரி பார்த்துக் கொள்ளலாம்.
 7. PeKa B40 - இன் பெறுநர்கள் மீது ஏதாவது கட்டணம் விதிக்கப்படுமா?
  • இல்லை. எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது. PeKa B40 - இன் அனைத்து பலன்களும்இலவசமாக வழங்கப்படுகின்றன.
 8. PeKa B40 ஏன் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை மட்டும் உள்ளடக்கி உள்ளது?
  • PeKa B40 ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டு பல நிலைகளில். கட்டங் கட்டமாக, தொடங்கப்படுகிறது
  • B40 பிரிவில் உள்ள உறுப்பினர்கள் மற்ற பிரிவில்(எம்-40 & டி-20) உள்ளவர்களை விட தொற்றுநோயற்றநோய்களால்அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனும் பிரிவில் உள்ளவர்கள் தொற்றுநோயற்ற நோய்களால் அதிக சுமைக்கு ஆளாகின்றனர். இப்பிரிவினரிடையில்காணப்படும் இத்தகைய நோய்கள் பெரும்பாலும் கண்டறியப்படாமல் அல்லது சரியான கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருக்கிறது.
  • இத்திட்டத்தின் பயனளிப்பு மற்றும் அரசாங்க நிதிநிலை ஆகியவற்றைப் பொறுத்து இது விரிவாக்கப்பட்டு மற்ற பிரிவினரும் உட்படுத்தப்படுவர் .
 9. பலன்கள் 2, 3 மற்றும் 4 ஆகியவற்றைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள் யாவை?
  • அரசாங்க வாழ்வாதார உதவி (BSH) மற்றும்அவர்களதுவாழ்க்கைத்துணை 40 வயதிற்குமேற்பட்டவர்களாக இருத்தல்அவசியம்.
  • சுகாதாரப் பரிசோதனையை (பலன் 1) மேற்கொண்டிருத்தல் அவசியம்; மற்றும்
  • அனைத்து விண்ணப்பங்களும் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகள் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
  • மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பலன்கள் பிரிவில் இங்கேபார்க்கவும்

பலன் 1 : சுகாதாரப் பரிசோதனை

 1. சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ளத் தேவைப்படுபவை என்ன?
  • உங்கள் மைகாட் அட்டையை (MyKad IC) உடன் கொண்டு வரவும்.
  • முன் பதிவு தேவை இல்லை.
  • கட்டணங்கள் விதிக்கப்படாது.
  • உண்ணா நிலையில் இருக்கத் தேவை இல்லை.
 2. ஒரே பெறுநர் ஒன்றுக்கு (1) மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவாரா?
  • இல்லை. போதுமான நிதிகள் இருக்கும் வரை, பரிசோதனை தகுதிவாய்ந்த பெறுநர்களுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும்.
  • கிளினிக்கில் முதல் வருகையின் போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்குப் பின்பு, பெறுநர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, தேவையான சோதனைக்காக இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • ஒரு PeKa B40 பெறுநர் மறுமுறை பரிசோதனைக்காக மற்றொரு கிளினிக்கிற்குச்சென்றால் இந்தச் செயல்முறை தொடராது.
 3. பெறுநர்கள் பரிசோதனையை எங்கு மேற்கொள்ள முடியும்?
  • PeKa B40 -இல் பதிவு செய்யப்பட்டு முன்கதவில் PeKa B40 ஒட்டுப்படத்தைக் காட்சிப் படுத்தியிருக்கும் எந்தத் தனியார் கிளினிக்கிலும்மேற்கொள்ளலாம்.
  • PeKa B40கிளினிக்குகளின்பட்டியலை இங்கே பெறலாம்.
  • பணியில் மருத்துவர்கள் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான அரசாங்க கிளினிக்குகளில் மேற்கொள்ளலாம்.
 4. நடத்தப்படும் சுகாதாரப்பரிசோதனைகளின் பட்டியல் என்ன?
  1. மருத்துவ சோதனை:
   • மருத்துவ வரலாறு பதிவெடுப்பு, தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிணிகளைக் குறிப்பிடுதல், இடர் காரணிகள் உட்பட
   • மனநலப் பரிசோதனை
   • உடல் பரிசோதனை
   • பெண் பெறுநர்களுக்கான மருத்துவ மார்பக சோதனை, மற்றும் இடர் நிலையில் இருக்கும் ஆண் பெறுநர்களுக்கு மருத்துவ புரோஸ்டேட் சுரப்பி சோதனை
  2. ஆய்வக சோதனைகள்:
   • இரத்த உயிரணு சோதனை
   • இரத்த சர்க்கரை கட்டுப்பாடு சோதனை
   • கொழுப்பு நிலை சோதனை
   • சிறுநீர் சோதனை
   • சிறுநீரக செயல்பாடு சோதனை
  3. மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தசுகாதாரப் பரிசோதனைகளுக்கும் பயன் அடையும் பெறுநர்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட மாட்டாது..
 5. பரிசோதனையின் முடிவுகள் எவ்வாறு பெறுப்படுகின்றன?
  • சுகாதாரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெறுநர்களுக்கு ஏற்கனவே தங்களின் இரண்டாவது வருகைக்கான ஒரு தேதி வழங்கப்பட்டிருக்கலாம். அப்படி இல்லை எனில், மருத்துவர் / கிளினிக், பெறுநர்களைத் தொலைபேசி, குறுஞ்செய்தி அமைப்பு (SMS) அல்லது வாட்ஸ் ஆப் (WhatsApp) வழியாகத் தொடர்பு கொண்டு இரண்டாம் வருகைக்கான சந்திப்பை ஏற்பாடு செய்யலாம்.
  • மேலும் சிகிச்சை அல்லது ஆய்வு தேவைப்பட்டால், தனியார் மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட அல்லது அருகிலுள்ள அரசாங்க கிளினிக்குகள்(Klinik Kesihatan) அல்லது சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கலாம். சுகாதார அமைச்சின் அமைப்புகளுக்குக் கொண்டு செல்வதற்காக தனியார் கிளினிக்குகள் மூலம் PeKa B40 பரிந்துரைக் கடிதம் வழங்கப்படும்.

பலன் 2 - மருத்துவ சாதன உதவிகள்

 1. மருத்துவ சாதன உதவிக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை என்ன?
  • மருத்துவ சாதன உதவிக்கான விண்ணப்பம் மருத்துவ சமூகப்பணித் துறையின் வாயிலாக சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
  • PeKa B40 பெறுநருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ அலுவலர் அல்லது வல்லுநர் விண்ணப்ப செயல்முறைக்காக மருத்துவ சமூக அலுவலருக்குப் பரிந்துரை செய்வார்.
  • மருத்துவ அலுவலர் அல்லது வல்லுநர் எத்தகைய மருத்துவ சாதனம்தேவை என்பதையும் தீர்மானிப்பார்.
 2. எவ்வகையிலான மருத்துவசாதன உதவி வழங்கப்படுகிறது?
  • சுகாதார அமைச்சு மருத்துவமனை வல்லுநர்களின் உறுதிப்படுத்துதலின் அடிப்படையில் 10 வகை மருத்துவசாதன உதவிகள் வழங்கப்படும்:
   1. இதயத்திற்கான உறைகுழாய்
   2. செயற்கை மூட்டு உபகரணங்கள்
   3. கேட்டல் திறன் உதவிக் கருவிகள்
   4. இதயச் சீராக்கிகள்
   5. தண்டு வடத்திற்கான செயற்கைப் பொருத்திகள் மற்றும் உள்பொருத்துகள்
   6. மூட்டு எலும்புகளுக்கான செயற்கைப் பொருத்திகள் மற்றும் சிம்புகள்
   7. உள் விழியிக்க வில்லைகள்
   8. மூச்சு இயக்கச் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உயிர்வளிச் செறிவி
   9. ஊட்டச்சத்து ஆதரவு உதவி
   10. சக்கர நாற்காலிகள்
  • PeKa B40 மூலம் நிதியளிக்கக்கூடிய அதிகபட்ச மருத்துவசாதன உதவி ரி.ம. (RM) 20,000  ஆகும். இது ஒவ்வொரு பிரிவிலும் உள்ள சாதனங்களின்விலை வரம்பைப் பொருத்ததும் ஆகும்.
 3. விண்ணப்பிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களின்செலவினம் ரி.ம. (RM) 20,000- க்கும் குறைவாக இருந்தால் என்ன நேரும்?
  • PeKa B40 அரசாங்கத்தால் நடத்தப்படும் வரை, ரி.ம. (RM) 20,000 ஒதுக்கீட்டில் இன்னும் பணம் மீதம் இருக்கும் பட்சத்தில், பெறுநர்கள் பட்டியலில் இருக்கும் பலவகையான மருத்துவ உபகரணங்களுக்கு சாதனங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே உள் விழியிக்க வில்லையைப் பெற்ற பெறுநர் ஒருவர் இதயச் சீராக்கிக்கு வேறு காலகட்டத்தின் போது விண்ணப்பிக்கலாம்.
 4. குடும்ப உறுப்பினர்கள் மருத்துவசாதன உதவியிலிருந்து நன்மை அடைவார்களா?
  • வாழ்வாதார உதவி பெறுநர்கள் மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய துணைவர்கள் மட்டுமே PeKa B40 -க்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஒவ்வொருவரும் அதிகபட்சமாக ரி.ம. (RM) 20,000 நிதி உதவிக்கு  தகுதி பெற்றவராக இருப்பர். இந்தத் தொகை பிற குடும்ப உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட முடியாது.

பலன் 3 - புற்றுநோய் சிகிச்சை முழுமையடைவதற்கானஊக்கத்தொகை

 1. கொடுக்கப்படும் ஊக்கத்தொகையின் மதிப்பு என்ன?
  • ஊக்கத்தொகையின் மதிப்பு ரி.ம. (RM) 1000 ஆகும், இது நோயாளிகள் தங்களது குணமளிக்கும் சிகிச்சைகளை சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பரிந்துரைப்படி நிறைவு செய்ய ஊக்கப்படுத்துவதாகும்.
  • பலன் 3 பாரம்பரிய அல்லது மாற்று சிகிச்சைகளை உள்ளடக்கியதல்ல.
  • இது இரண்டு (2) கட்டங்களில் வழங்கப்படும்.
   • முதல் கட்டம் – ரி.ம. (RM) 300, சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளிருந்து முறையான நடைமுறைப்படி விண்ணப்பம் கிடைக்கும்போது, பெறுநர்களின் கணக்கில் வாழ்வாதார உதவியைப் போல நேரடியாகச் செலுத்தப்படும்.
   • இரண்டாம் கட்டம்- ரி.ம. (RM) 700, சிகிச்சையளிக்கும் மருத்துவர் பரிந்துரைத்தபடி தங்களின் சிகிச்சைத் திட்டத்தை நிறைவு செய்த பெறுநருக்குக் கொடுக்கப்படும். இதுவும் நேரடியாக பெறுநர்களின் கணக்கில் செலுத்தப்படும்.
 2. இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க பெறுநர்களுக்கு யார் உதவி புரிவார் ?
  • PeKa B40 பெறுநர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருக்கிறார் எனில், சிகிச்சையளிக்கும் மருத்துவர் அல்லது வல்லுநர் குறிப்பிட்ட பெறுநரின் சார்பில் விண்ணப்பம் செய்வார்.
 3. எனது கடைசி புற்றுநோய் சிகிச்சையை நிறைவு செய்யவில்லை என்றால், இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவேனா?
  •  புற்றுநோயாளிகள் சிகிச்சையை நிறைவு செய்வதை ஊக்குவிக்கவே இந்த ஊக்கத்தொகை உருவாக்கப்பட்டது. இரண்டாவது ஊக்கத்தொகையை பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனை என்பது, நோயாளி கண்டிப்பாக மருத்துவரின் சிகிச்சை திட்டத்துடன் இணங்கி அதைத் தவறாது நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • சிகிச்சையளிக்கும் மருத்துவர் அல்லது வல்லுநர் உறுதிப்படுத்திய பின்னர் சிகிச்சை நிறைவு அளவை தீர்மானிக்கும் அவர்தம் வல்லமையின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • இந்த ஊக்கத்தொகை உயிருடன் இருக்கும் பெறுநர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் மற்றும் உறவினர்களால் கோரப்பட முடியாது .
 4. PeKa B40 பெறுநர் புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டிருக்கும் போது ஒருவர் இந்த நன்மைக்குத் தகுதியுடைவர் ஆவாரா?
  • ஆம். புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டிருக்கும் PeKa B40 -இன் பெறுநர்கள் இந்தபலனுக்குத்தகுதியுடையவர்களாவர். இருப்பினும்,சுகாதாரப்பரிசோதனை என்பது கட்டாயமாகும், மற்றும் / அல்லது அதன் முடிவுகள் PeKa B40 தரவுத்தளத்தில் கண்டிப்பாகப் பதிவேற்றப்பட வேண்டும்.சுகாதாரப் பரிசோதனை இன்னும் செய்யப்படவில்லை என்றால், மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் அல்லது வல்லுநர்கள் நோயாளிகளுக்கு அதை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி ஆலோசனை அளிப்பார்கள்

பலன் 4 – போக்குவரத்து ஊக்கத்தொகை

 1. போக்குவரத்து ஊக்கத்தொகை எதை உட்படுத்தியது?
  • போக்குவரத்துஊக்கத்தொகை என்பது புற்றுநோய் சிகிச்சை (பலன் 3) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட சந்திப்புத் தேதிகளின்படி மருத்துவ சாதனங்களின் பயன்பாடு / உட்பொருத்துதல் (பலன் 2) ஆகியவை உள்ளிட்ட சிகிச்சைகளுக்குச் சென்றுவரும் பயணத்தை உட்படுத்தியது ஆகும்.
 2. போக்குவரத்துஊக்கத்தொகையின் மதிப்பு என்ன?
  • ஊக்கத்தொகையின் மதிப்பு நோயாளியின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு உள்ள தொலைவைச் சார்ந்து இருக்கும்.
  • மருத்துவமனைக்குச் சென்று வரும் ஒவ்வொரு பயணத்திற்காகவும் தீபகற்ப மலேசியாவிற்கு ரி.ம. (RM) 5000 வரம்பையும் சபா/ சரவாக்/ லாபுவானுக்கு ரி.ம. (RM) 1000 வரம்பையும் மீறாத அளவிலான தொகை பெறுநரின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
 3. ஊக்கத்தொகைக்கு ஒருவர் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
  • பலன் 2 பெறுநர்களுக்கு, அதாவது மருத்துவசாதன உதவிகளுக்கான விண்ணப்பம் மருத்துவ சமூகப் பணி அலுவலர்கள் மூலமாக செய்யப்படலாம்.
  • பலன் 3 பெறுநர்களுக்கு, அதாவது புற்றுநோய் சிகிச்சையை முழுமையடைவதற்கான ஊக்கத்தொகைக்கான விண்ணப்பம் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கும் மருத்துவர் மூலமாக செய்யப்படலாம்
 4. ஒரு நோயாளி மருத்துவமனைக்குச் செல்லாவிட்டால் என்ன நேரும்?
  • இந்த ஊக்கத்தொகை என்பது நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதையும் அவர்களது சிகிச்சையை நிறைவு செய்வதையும் ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது. நோயாளி சிகிச்சை அமர்வுகளுக்குச் செல்லாவிட்டால் அந்நபருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது.
 5. இந்த ஊக்கத்தொகை மருத்துவமனைக்குச் சென்றுவரும் பயணத்திற்கான செலவினத்தை உள்ளடக்கியதா?
  • ஆம், இந்த ஊக்கத் தொகை திரும்பிச்செல்லும்பயணத்திற்கும் கணக்கிடப்பட்டு நிதி உதவியாக அளிக்கப்படுகிறது, அதாவது மருத்துவமனைக்குச் சென்று திரும்புவதற்கான தொகை வழங்கப்படுகிறது, இது PeKa B40 க்கான கட்டண விகிதம் மற்றும் நிபந்தனைகளின் படியே வழங்கப்படும்.
 6. போக்குவரத்து ஊக்கத்தொகை எவ்வாறு செலுத்தப்படுகிறது?
  • போக்குவரத்து ஊக்கத்தொகைக்கான விண்ணப்பம் மருத்துவ சமூகப் பணி அலுவலர் அல்லது சிகிச்சையளிக்கும் மருத்துவ அலுவலரால் செய்யப்பட்ட பின்னர் அமைப்பு தீர்மானிக்கப்பட்ட தொலைவை அடிப்படையாகக் கொண்டு செலுத்தவேண்டிய தொகையைக் கணக்கிடும்.
  • அடுத்த தொடர் சிகிச்சைக்கு முன்னர் நோயாளியின் கணக்கில் நேரடியாக இத்தொகை செலுத்தப்படும்.

தனியார் மருத்துவர்கள்

 1. தனியார் மருத்துவர்களுக்கு பணம் எவ்வாறு அளிக்கப்படும்?
  • தனியார் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (Private Healthcare Facilities & Serivces Act 1998) இன் 7 வது அட்டவணைப்படி (7th Fee Schedule)மற்றும் இப்போது நடைமுறையில் உள்ள 2006 ஆம் ஆண்டுத் திருத்தத்தின்படி தனியார் மருத்துவர்களுக்கு பணம் அளிக்கப்படுகிறது.
  • தொடர்புடைய தனியார் மருத்துவர்கள் எந்தப் பதிவுக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
  • PeKa B40 - இன் கீழ் செய்யப்படும்சுகாதாரப் பரிசோதனைகளின் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளுதல் கிடையாது.
  • ஆய்வக சோதனைகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதால் தனியார் ஆய்வகத்திற்கு நேரடியாகப் பணம் செலுத்தப்படும். பணம் செலுத்துதல் அல்லது கட்டணம் பகிர்தல் என்பதுதனியார்கிளினிக்குகள் மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு இடையில் நடைபெறாது.
  • ஆர்வம் உள்ள தனியார் மருத்துவர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க தன்னார்வமாகப் பதிவு செய்து கொள்ளலாம் (கட்டாயமில்லை).
 2. இந்தத் திட்டத்தில் ஆர்வம் உள்ள தனியார் மருத்துவர்கள் எவ்வாறு பங்கேற்கலாம்?
  • தனியார் மருத்துவர்கள் இயங்கலையில் இங்கே பதிவுசெய்யலாம்.
  • PeKa B40 - இல் பங்கேற்பதினால் ஏற்படும் நன்மைகள்