பலன் 1 : சுகாதாரப்பரிசோதனை


 • பெறுநர்கள் சுகாதாரப் பரிசோதனையை (பலன் 1) மேற்கொள்வதன் மூலம் மட்டுமே மருத்துவ சாதன உதவிகள் (பலன் 2), சிகிச்சை முழுமையடைவதற்கானஊக்கத்தொகை (பலன் 3), மற்றும் போக்குவரத்து ஊக்கத்தொகை(பலன் 4) ஆகியவற்றுக்குத் தகுதி பெறலாம்.
 • PeKa B40-இல் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு தனியார் கிளினிக்கிலும்சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
 • சுகாதாரப்பரிசோதனையில் அடங்குபவை:
  1. மருத்துவ வரலாறு பதிவெடுப்பு, தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிணிகளைக் குறிப்பிடுதல், இடர் காரணிகள் உட்பட
  2. மனநலப் பரிசோதனை
  3. உடல் பரிசோதனை
  4. பெண் பெறுநர்களுக்கான மார்பக மருத்துவசோதனை, மற்றும் இடர் நிலையில் இருக்கும் ஆண் பெறுநர்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி மருத்துவ சோதனை
  5. இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகள்
 • இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பின்வரும் சோதனைகளுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் - இரத்த அணு சோதனை, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு சோதனை, இரத்தக் கொழுப்பு சோதனை, சிறுநீரகச் செயல்பாடு சோதனை மற்றும் சிறுநீர் சோதனை.
 • PeKa B40பலன் பெறுநர்கள் இச்சோதனைகளை மேற்கொள்ள உண்ணா நிலையில் இருக்கத் தேவையில்லை.
 • PeKa B40 தொகுப்பின் கீழ் பலன் பெறுநர்களுக்கு சுகாதார மற்றும் ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்குக் கட்டணம் விதிக்கப்படாது.
 • PeKa B40 பலன்பெறுநர்களுக்கு சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்கள் அரசாங்க கிளினிக்குகளுக்கு(Klinik Kesihatan)பரிந்துரைக்கப்படலாம் அல்லது அவர்கள் தனியார் கிளினிக்கில்சிகிச்சை பெற ஒப்புக்கொண்டால், கண்டிப்பாக பெறுநர்கள் சிகிச்சைச் செலவை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு, PeKa B40 திட்டத்தில் எந்த சிகிச்சை அல்லது மருந்து செலவும் உட்படுத்தப்படவில்லை.

பலன் 2 - மருத்துவ சாதன உதவிகள்


 • இப்பலன் செயல்முறைகள் / சிகிச்சைகள் ஆகியவற்றுக்குத் தேவைப்படுகின்ற, அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படாத மருத்துவ சாதனங்களைஉள்ளடக்கியது.
 • அதிகபட்சமாக ரி.ம. (RM) 20,000, மருத்துவசாதனங்கள்வடிவில் தேவைக்குஏற்பவழங்கப்படும்.
 •  பலன் 2 பின்வரும் பிரிவுகளில் இருக்கும் மருத்துவ சாதனங்களை உள்ளடக்கியது:
  1. இதயத்திற்கான உறைகுழாய்
  2. செயற்கை மூட்டு உபகரணங்கள்
  3. கேட்டல் திறன் உதவிக் கருவிகள்
  4. இதயச் சீராக்கிகள்
  5. தண்டு வடத்திற்கான செயற்கை பொருத்திகள் மற்றும் உள்பொருத்துகள்
  6. மூட்டு எலும்புகளுக்கான செயற்கை பொருத்திகள் மற்றும் சிம்புகள்
  7. உள் விழியிக்க வில்லைகள்
  8. மூச்சு இயக்கச் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உயிர்வளிமச் செறிவி
  9. ஊட்டச்சத்து ஆதரவு உதவி
  10. சக்கர நாற்காலிகள்
 • PeKa B40 பெறுநர்கள் இப்பலனைப்பெறுவதற்கு முதலில்சுகாதாரப் பரிசோதனை(பலன் 1) மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.
 • PeKa B40-இன் பெறுநர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பயன் பொருந்தும், ஆதலால்PeKa B40 பெறுநர்களாக இருக்கும்நோயாளிகளுக்குஅரசாங்க மருத்துவ வல்லுநர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

பலன் 3 - புற்றுநோய் சிகிச்சை முழுமையடைவதற்கானஊக்கத்தொகை


 • பலன் 3-இன்நோக்கமானது புற்று நோயாளிகள், குறிப்பாக சிகிச்சை மற்றும் நோயின் தொடக்கக் கட்டங்களில் உள்ளவர்கள், சுகாதார அமைச்சின் புற்று நோய் வல்லுநர்களால் அமைப்பட்ட சிகிச்சைத் திட்டத்தை நிறைவு செய்ய ஊக்குவிப்பதாகும்.
 • அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சையை நிறைவுசெய்யும் புற்று நோயாளிகளுக்கு ரி.ம. (RM)1,000 வழங்கப்படுகிறது.
 • PeKa B40பெறுநர்கள் இந்த பலனைப் பெறுவதற்கு முதலில்சுகாதாரப் பரிசோதனை (பலன் 1) மேற்கொள்ள வேண்டும்.
 • சிகிச்சையின் கட்டத்தைப் பொறுத்து ஊக்கத்தொகை இரண்டு (2) பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 • தகுதி பெற்ற அனைத்துPeKa B40 பெறுநர்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்குகளின் மூலம் ஊக்கத்தொகை நேரடியாக அளிக்கப்படுகிறது.
 • பலன்3-இன் விண்ணப்பம் மற்றும் தகுதிக்கான சான்று ஒரு சுகாதார அமைச்சின் மருத்துவர் அல்லதுவல்லுநர் மூலம்PeKa B40 பெறுநர்களான நோயாளிகளின் சார்பாகச் செய்யப்பட வேண்டும்.

பலன் 4 – போக்குவரத்து ஊக்கத்தொகை


 • இப்பலன்PeKa B40பெறுநர்கள் சிகிச்சை பெறுவதற்காக,அரசாங்க மருத்துவமனைகளுக்குப் (MOH) பயணம் செய்ய அவர்களின் போக்குவரத்துச் செலவுச் சுமைகளைக் குறைப்பதன்நோக்கத்தில்உருவாக்கப்பட்டது. இது பயணச்செலவு முழுவதையும் உள்ளடக்கியது அல்ல.
 • பலன் 2 மருத்துவ சாதன உதவிகள்) மற்றும் / அல்லதுபலன் 3 புற்றுநோய் சிகிச்சை முழுமையடைவதற்கானஊக்கத்தொகை) ஆகியவற்றின் பெறுநர்கள் மட்டுமே இந்தப் போக்குவரத்து ஊக்கத்தொகைக்குத் தகுதி பெற்றவர்கள்.
 • பெறப்படக் கூடிய அதிகபட்ச போக்குவரத்துஉதவித் தொகை:
  • தீபகற்ப மலேசியாவிற்கு ரி.ம. (RM)500
  • சபா / சரவாக் / லாபுவானுக்கு ரி.ம. (RM) 1,000
 • கொடுக்கப்படும் போக்குவரத்து ஊக்கத் தொகை மருத்துவமனையிலிருந்து பெறுநரின் வீட்டிற்கு இடையே உள்ள தொலைவைப் பொறுத்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகையை அடிப்படையாகக் கொண்டது.
 • பலன் 4-இன் விண்ணப்பம் மற்றும் தகுதிக்கான சான்று மருத்துவ சமூகபணியாளர் அல்லது நோயாளிக்கு சிகிச்சையளிக்கும்பொறுப்பில் இருக்கும் மருத்துவ அலுவலரால் செய்யப்பட வேண்டும்.
 • பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளின் மூலம் ஊக்கத்தொகை நேரடியாக பெறுநருக்கு வழங்கப்படுகிறது.