தனியுரிமை கொள்கை
ப்ரோதெக்ட் ஹெல்த் செண்டிரியான் பெர்ஹாட் ("ப்ரோதெக்ட் ஹெல்த்") ProtectHealth Sdn. Bhd. (“Protecthealth”) தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, ("பிடிபிஏ"/“PDPA”) அனைத்து தனிநபர் தரவுகளின் தனியுரிமை, இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு (முகமையான தகவல்கள் உட்பட) ஆகிய பொறுப்புணர்த்தப்பட்டவற்றைப் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது..
இந்தத் தனியுரிமைக் கொள்கை நாங்கள் எங்களிடம் உள்ள பெடுலி கெசிஹாட்டன் PeKa B40நலத்திட்டத்தின்(இனிமேல் PeKa B40 எனக் குறிப்பிடப்படும்) பலன்களைப்பெறும் பெறுநர்களின் சார்பாக நாங்கள் வைத்துள்ள தனிப்பட்ட தரவுகள் மற்றும் பிறரின் தரவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது பற்றிய ProtectHealth-ன்கொள்கையை விளக்குகிறது. இந்தக் கொள்கையானது, எங்கள் வலைத்தளங்களுக்கான பார்வையாளர்கள் உட்பட, ProtectHealth-ன் மூலம்செய்யப்படும் அனைத்து செயல்முறைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் 2010-இன் ("பிடிபிஏ"/“PDPA”) படி, நாங்கள் எப்போதும் உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கியத் தகவல்களை இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பதை கொள்கை நடைமுறையாகச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் தனியுரிமைக் கொள்கையின் நோக்கத்திற்காக, "தனிப்பட்ட தரவு" மற்றும் "செயலாக்கம்" ஆகிய சொற்கள் PDPA-ஆல்குறிப்பிடப்பட்ட அதே பொருளையே கொண்டுள்ளன. வேறு விதமாகக் குறிப்பிடாத பட்சத்தில், இந்த வலைத்தளத்தின் பயன்பாடு மற்றும் / அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகளை அளிப்பது என்பது இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவாதிக்கப்பட்டதைப் போல் ProtectHealth-க்குஉங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்கம் செய்ய நீங்கள் வழங்கும் ஒப்புதலாக அறியப்படும். தயவு செய்து தகவலை வழங்குமுன் அல்லது இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னர் பின்வரும் விளக்கத்தைக் கவனமாகப் படிக்கவும்.
நாங்கள் செயலாக்கம் செய்யும் தகவல்கள்
எங்கள் வலைத்தளத்தின் மூலம் நீங்களாக முன்வந்து வழங்கிய, உடல்நலப் பரிசோதனை நன்மைக்காக எங்கள் சுகாதார பராமரிப்பு அமைப்புகளில் பதிவு செய்யும்போது வழங்கிய உங்களது தனிப்பட்ட தரவுகளை நாங்கள் செயலாக்கம் செய்கிறோம். இந்தத் தகவல் என்பது தனிப்பட்ட தரவுகளான, உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், வயது, தொடர்புக்கான தகவல், இனம், மதம், தொழில், நெருங்கிய உறவினர் பற்றிய விவரங்கள், நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் நோயின் வகை, அத்துடன் பரிசோதனைகள் , சிகிச்சைகள் மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஒவ்வொருமுறையும் எங்கள் பதிவு செய்யப்பட்ட சுகாதார அமைப்புக்கு சிகிச்சை அல்லது சுகாதார ஆலோசனைகளைப் பெறுவதற்கு நீங்கள் வரும் போது, புதிய மருத்துவத் தகவல்கள் உங்கள் மருத்துவப்பதிவில் சேர்க்கப்படும். இந்தவிடயத்தைப் பொருத்தமட்டில், உங்கள் முக்கியமான தனிப்பட்ட தகவலைச் செயலாக்கம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
இவ்வலைத்தளத்தின் வழியாக வழங்கப்பட்ட மற்றும் வேலைத்தேடலில் உள்ள தனிநபர்கள் மற்றும் வேலைவிண்ணப்பம் சார்ந்த பிறவளங்கள் மூலம் பெறப்பட்ட உங்களது தனிப்பட்ட தகவல்களையும் நாங்கள் செயலாக்கம் செய்வோம்.
மற்றொரு நபரைப் பற்றிய தரவு அல்லது தனிப்பட்ட தகவலை நீங்கள் வழங்கினால், அந்நபர் உங்களைத் தன் சார்பாகச் செயல்படுவதற்கு நியமித்துள்ளார், அவர்களின் தனிப்பட்ட தரவை செயலாக்க ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் அவர்களின் சார்பில் எந்த தரவுப் பாதுகாப்பு அறிவிப்புகளைப் பெறவும் அனுமதித்து ஒப்புதல் கொடுத்து உள்ளார் என்பதை நீங்கள் முன்னரே உறுதி செய்யவேண்டும். நீங்கள் வழங்கிய தனிப்பட்ட நபரின் தகவல் மற்றும் நீங்கள் ஒப்புக் கொண்ட நடவடிக்கையின் படி, அக்குறிப்பிட்ட நபரின் ஒப்புந்தத்தைப் பெற நாங்கள் உங்கள் உதவியை நாடலாம். உங்கள் இணக்கநிலை தோல்வியின் காரணமாக எங்களுக்கு ஏற்படும் எந்த சேதத்திற்கும் இழப்பிற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
உங்கள் தரவை நாங்கள் செயலாக்கம் செய்வதற்கான நோக்கம்
உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்கம் செய்வதற்கான நோக்கம் பின்வருமாறு:
- உங்களுடன் எங்களது அலுவலை முடிக்க, நிர்வாக நோக்கங்களுக்காக, PeKa B40 திட்டத்தின் கீழ் உங்கள் நன்மைகளை மேலாண்மை செய்யவும் / உறுதிப்படுத்தவும்;
- எங்களது சுகாதாரத் திட்டங்களைப்பற்றி நேரடியாக உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொள்வதற்கு
- சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கு மற்றும் / அல்லது நடத்துவதற்கு
- குறிப்பிடப்பட்ட பராமரிப்பை கண்காணிக்கவும் / மதிப்பீடு செய்ய
- பராமரிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதக் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட
- எங்களுடன் பணிபுரிவதற்கான உங்கள் பொருந்தும் தன்மையை மதிப்பீடு செய்யவதற்கு
- சேவை ஒப்பந்தங்களை முன்னெடுப்பதற்கு
- மருத்துவ ஆராய்ச்சி மற்றும் / அல்லது நலவக சோதனைகள் நடத்துவதற்கு
- ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு அளிக்க
- உங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க
- சட்டம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுக்களின் தேவைகளை நிறைவு செய்ய
- ஆராய்ச்சி நடத்த மற்றும் / அல்லது புள்ளியியலை ஒழுங்கமைக்க;
- குற்றச்சாட்டுகள் அல்லது புகார்களை விசாரிக்க; மற்றும்
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுடன் தொடர்புடைய வேறு எந்த நோக்கத்திற்காகவும். ProtectHealth உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்கம் செய்ய வேண்டும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்க. தரவு இல்லாமல், மேலே பட்டியலிடப்பட்டுள்ள எந்த நோக்கத்திற்காகவும் எங்களால் அவற்றைச் செயலாக்கம் செய்ய இயலாது.
உங்கள்தரவு சேகரிப்புகளின் மூலங்கள்
- சட்டமுறையான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள்
- எங்களுடன்பதிவு செய்தசுகாதார அமைப்புகள்
- வலைத்தளம் / மின்னஞ்சல்
- பதிவாக்கம் (வன் படி / மென் படி)
- நீங்கள் இணைத்துள்ள பிற ஆவணங்கள்
- ஆராய்ச்சி
- உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் நடந்த பேச்சு / எழுத்து தொடர்புகள்.
உங்கள் தகவலை யாரிடம் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். (மலேசியாவின் உள்ளே அல்லது வெளியே)
உங்கள் தனிப்பட்ட தரவு இத்தரப்பினருக்கெல்லாம் (ஆனால் இந்த வரையறை மட்டுமே அல்ல) வழங்கப்படலாம், வங்கிகள், தணிக்கையாளர்கள், அரசாங்கத் துறைகள் மற்றும் / அல்லது முகவர்கள், ஒழுங்குமுறை மற்றும் /அல்லது சட்டமுறை அமைப்புகள், கடன் காசோலை நிறுவனங்கள், தொடர்புடைய நிறுவனங்கள், வணிகப் பங்காளிகள், சேவை வழங்குநர்கள், நீதிமன்றங்கள் மற்றும் ஆணையங்கள், நெருங்கிய உறவினருக்கு அடுத்துள்ளவர், ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதார பராமரிப்பு அமைப்புகள், அதேபோல் மேலே கூறப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும் நீங்கள் கேட்டுக் கொண்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய ஒத்த மூன்றாம் தரப்பினரிடமோ, அல்லது தனிப்பட்ட தரவு சேகரிப்பின் போது வேறு எந்த நோக்கத்திற்காக அல்லது மேலே உள்ள எந்தவொரு நோக்கத்திற்கும் நேரடியாகத் தொடர்புடைய வேறு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் வெளிப்படுத்தலாம்.
ProtectHealth-இடம்இரகசியத்தன்மை பொறுப்புணர்வைக் கொண்ட எந்த நபர் / நிறுவனமும் தொடர்ந்து தனிப்பட்ட தரவுகளைக் காக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதில் தொடர்புடைய நிறுவனங்கள், வணிகப் பங்காளிகள், சேவை வழங்குநர்கள், அதே போல் மேலே கூறப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும் நீங்கள் கேட்டுக் கொண்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய எந்த மூன்றாம் தரப்பினரும் உட்படுவார்கள். உங்களின் தனிப்பட்ட தரவுகள் மலேசியாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கும் மாற்றம் செய்யப்படலாம். ProtectHealth-காக,ProtectHealth சார்பில் அல்லது அதனோடு சேர்ந்து தரவு எதற்காக அளிக்கப்பட்டதோ அந்த நோக்கம் / நோக்கம் சார்ந்து எந்த நபரும் அல்லது நிறுவனமும் தரவுக்கான அணுக்கம் பெறலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்
நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவுகள் திருட்டு, அங்கீகரிக்கப்படாத அணுக்கம், வெளிப்படுத்துதல், படியெடுத்தல், பயன்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க எல்லா பொருத்தமான முயற்சிகளும் நடைமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. உங்கள் தனிப்பட்ட தரவை அணுக எந்தத் தரப்பினர் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியான கொள்கையைக் கடைபிடிக்கிறோம். அனைத்து ஊழியர்களும் உங்கள் தனிப்பட்ட தரவின் இரகசியத்தன்மையை பராமரிப்பதற்காக கடுமையான நடத்தை விதித் தொகுப்புகள் மற்றும் சட்டக் கடப்பாட்டிற்கு கட்டுப்பட்டு உள்ளனர்.
உங்கள் தனிப்பட்ட தரவைச் சேமித்து வைக்கும் கால அளவு
குறிப்பிடப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேவையான காலஅளவு வரை மட்டுமே நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை வைத்திருப்போம்.
தரவு சரியானது மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பதை நாங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறோம்
நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு துல்லியமாகவும் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுவதையும் உறுதி செய்ய பொருத்தமான வழிமுறைகளை எடுப்போம். தனிப்பட்ட தரவு என்பது முகவரி மற்றும் பிற தனிப்பட்ட சூழ்நிலைகளில் தொடர்ந்து மாற்றப்படுவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உங்கள் தனிப்பட்ட தரவில் எந்த மாற்றங்கள் இருந்தாலும் எங்களுக்குத் தயவு செய்து தெரிவிக்கவும்.
நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு ஏதேனும் தவறானது எனக் கண்டறிந்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு முகவரியில் எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.
தயவு செய்து நீங்கள் எங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட தரவு சரியானது, முழுமையானது மற்றும் குழப்பமற்றது என்பதற்கும் தகவல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் உறுதி செய்வதில் நீங்களே பொறுப்பானவர் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் தனிப்பட்ட தரவுக்கு எப்படி அணுக்கம் பெறுவது.
உங்கள் தனிப்பட்ட தரவுக்கான அணுக்கம், வினாக்கள் மற்றும் புகார்களை எழுத்துப்பூர்வமாக இந்த முகவரிக்கு அனுப்பலாம்:
ProtectHealth Corporation Sdn Bhd
F01 & F02, 1st Floor, Block 2300,
Century Square, Jalan Usahawan,
63000, Cyberjaya Selangor
தொலைபேசி எண்: +603 8687 2500
தொலைநகல் எண்: +603 8687 2599
மின்னஞ்சல் (e-mail) : info@protecthealth.com.my
எங்கள் பதிவில் இருக்கும் தனிப்பட்ட தரவுகள் சரியானவை அல்ல என நீங்கள் கருதினால் அல்லது நீங்கள் அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அவற்றைச் சரி செய்யச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு.
மற்ற வலைத்தளங்களுக்கு இணைப்புகள்
இந்த அகப்பக்கத்திலிருந்து மற்ற அகப்பக்கங்களுக்கு செல்வதற்கான இணைப்புகள் உள்ளன. இத்தனியுரிமை கொள்கை இந்த அகப்பக்கத்திற்கு மட்டுமே பொருந்தும். இணைப்புகள் உள்ள அகப்பக்கங்கள் வேறுபட்ட தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கக்கூடும், ஆதலால், பார்வையாளர்கள் பார்வையிடும் ஒவ்வொரு அகப்பக்கத்தின் தனியுரிமைக் கொள்கையை ஆராய்ந்து மற்றும்நன்குஅறிந்த பின்பு மற்ற அகப்பக்கங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எங்கள் தனியுரிமைக் கொள்கை மாற்றங்கள்
இத்தனியுரிமைக்கொள்கைமாற்றங்கள்செய்யப்பட்டால், அவை இப்பக்கத்தில்புதுப்பிக்கப்படும். இப்பக்கத்தை தொடர்ந்துஉலாவுவதன்மூலம், உங்களின்சமீபத்தியதகவல்கள்புதுப்பிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தளத்தைஎவ்வாறுபயன்படுத்துவதுமற்றும்சிலசூழ்நிலைகளில்தகவல்கள்பிறருடன் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதையும் அறிந்துக் கொள்ளமுடியும்.
மொழி
இந்தக் கொள்கையின் ஆங்கிலப் பதிப்புக்கும் வேறு எந்த மொழியின் பதிப்புக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருப்பின், ஆங்கிலப் பதிப்பே மற்ற மொழிப் பதிப்புகளுக்கு மேலாக எடுத்துக் கொள்ளப்படும்.