PeKa B40 பின்வரும் உண்மைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது:


1.

தொற்றுநோயற்றநோய்களின் சுமை
B40 பிரிவைச்சேர்ந்த 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களில், 47.6% இன்னும் குறைந்தது ஒரு கண்டறியப்படா தொற்றுநோயற்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

2.

மனநலம்
பெரியவர்கள் 10 பேரில், 3 பேர் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுB40 பிரிவில்தான் அதிக சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதாவது, பி40 அல்லாத பிரிவினரை ஒப்பிடும்போது,28%-க்கு 32% ஆக உள்ளனர்

3.

புற்றுநோய் சுமை
சுமை புற்றுநோய் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். மேலும் வருத்தமானது என்னவெனில், 60% புற்றுநோய் நிகழ்வுகள் கடைசி கட்ட நிலைகளில் மற்றும் நலமடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் நிலையில்தான் கண்டறியப்படுகின்றன.

4.

புற்றுநோய் சிகிச்சை
பல நோயாளிகள் தங்கள் புற்றுநோய் சிகிச்சையை நிறைவு செய்வதில்லை, மேலும் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படும் போது மட்டுமே மீண்டும் மருத்துவமனைக்குவருகிறார்கள். இது அவர்கள் நலமடைவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதுமற்றுமல்லாமல், சிகிச்சைச் செலவுகளையும் அதிகரிக்கிறது.

5.

மருத்துவ உபகரணச்
செலவுகள்சுகாதாரஅமைச்சு (MOH) மருத்துவமனைச் சிகிச்சைகளுக்கு அரசாங்கம் பெருமளவு உதவித் தொகை வழங்குகிறது என்றாலும், இதயச் சீராக்கிகள், தண்டுவட உள்பொருத்துகள் மற்றும் இவை போன்ற மருத்துவ உபகரணங்களின் சில செலவுகளை, இன்னமும் நோயாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இது, குறைந்த வசதி கொண்டவர்களின் நிதிச் சுமையைக் கூட்டுகிறது.

6.

போக்குவரத்துச் சிக்கல்கள்
வசதியற்ற நோயாளிகள், குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், நிதிப் பற்றாக்குறையினால், போக்குவரத்துக்குப் பணம் செலுத்த முடியாத நிலையில், தங்களின் சிகிச்சைகளுக்குத் தொடர்ந்து வர முடியாமல் போகிறது.

ஆதாரம்

1 & 2

தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற நிலை கருத்தாய்வு (NHMS) 2015 தரவின் பகுப்பாய்வு.

3

தேசியப் புற்றுநோய் பதிவக அறிக்கை 2007-2011.

4

தேசியப் புற்றுநோய் நிலையத்தில் இருந்து புற்றுநோய் வல்லுநர்கள் வழங்கிய தகவல்.

5 & 6

மருத்துவ உதவி நிதிப் பட்டறை வழங்கிய தகவல்.

 

PeKa B40- இன் கோட்பாடு


  • 2019-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் PeKa B40- க்காக ரி.ம. (RM)100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு, 800,000 பெறுநர்களை அதன் தொடக்க நிலையில் பேணக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • PeKa B40 பெறுநர்களுக்கு இது இலவசம்.
  • இத்திட்டம்B40 பிரிவினர் என அறியப்படுகிற 40% அடிமட்ட குடும்ப வருமான வரம்பில் இருக்கும் மலேசிய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. PeKa B40-இல் பங்கேற்பதற்கான தகுதி பின்வரும் அடிப்படையைக் கொண்டது:
    • அரசாங்க வாழ்வாதார உதவி பெறுநர்கள் (BSH) மற்றும் அவர்களது பதிவு செய்யப்பட்ட துணைவர்கள்.
    • 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்.
  • பங்கேற்பு தானாகவே ஏற்படுத்தப்படும் , எந்தப் பதிவும் தேவையில்லை.